நாம் அரசியல் அதிகாரம் பெற, பொருள் இழப்போம், சிறை ஏற்ப்போம், உயிர் துறப்போம், மானமிகு... மனிதநேயப் போராளி ""தனியரசு"" தலைமையில்... வாரீர் இணைவீர்..... தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழர் பேரவை... தொடர்புக்கு: 9842202445, 9345212385.

Total Pageviews

Saturday, November 27, 2010

kongu

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி: கொங்கு இளைஞர்கள் பரிசீலனை
செப்டம்பர் 06,2009,00:00  IST
வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற கருத்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையில் வலுத்து வருகிறது. இதன் மாநில அமைப்பாளர் தனியரசு சமீபத்தில் ஆத்தூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கொங்கு இளைஞர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.


கூட்டத்திற்குப் பின் தனியரசு கூறியதாவது: ஓமலூரில் சுங்கச் சாவடி வசூலை தட்டி கேட்ட எம்.எல்.ஏ., தமிழரசு மீது பொய் புகாரில் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய முயற்சிப்பதை கண்டிக்கிறோம். அந்த வழக்கை திரும்ப பெற வேண்டும். இலங்கையில் அந்நாட்டு ராணுவம் மூன்று லட்சம் தமிழர்களை திறந்தவெளி சிறையில் அடைத்து கொடுமை படுத்துவதை கண்டிக்கிறோம்.


மத்திய, மாநில அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு இலங்கை தமிழர்களை பாதுகாக்க வேண்டும்.பணம் பெற்றுக் கொண்டு ஓட்டு போடுவோரின் ஓட்டுரிமையை பறிக்க வேண்டும். சேலம்- உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலை யை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி, ஆத்தூர் பகுதியில் குடிநீர் பிரச்னையை போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர் பணியிடங்களுக்கு மாநில பதிவு மூப்பை மாற்றி, மாவட்ட பதிவு மூப்பை நடை முறைப்படுத்த வேண்டும்.


ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கீடு செய்து, விகிதாச்சார அடிப்படையில் கல்வி மற்றும் அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தீண்டாமை வன்கொடுமை சட்டத்தை முறைகேடாக பயன்படுத்துவதால், அச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஐகோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசு இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


மின்தடையை சரிசெய்ய மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை வரும் சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகள் மேற்கொள்கிறது. அ.தி.மு.க.,வுடன் கூட்டணி குறித்து நிர்வாகிகளிடையே ஆலோசனை நடத்தி வருகிறேன்.இவ்வாறு தனியரசு கூறினார்.


கொங்கு பேரவையைப் பொறுத்தமட்டில், தீண்டாமை வன்கொடுமை சட்டம் தலையாய பிரச்னையாக உள்ளது. "தி.மு.க., ஆட்சியில் இருக்கும் வரை அந்தச் சட்டத்திலிருந்து விடிவு பிறக்காது. எனவே, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்த அச்சட்டத்தை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற கருத்தை பெரும்பாலான இளைஞர்கள் கூறியுள்ளனர். -நமது சிறப்பு நிருபர்