நாம் அரசியல் அதிகாரம் பெற, பொருள் இழப்போம், சிறை ஏற்ப்போம், உயிர் துறப்போம், மானமிகு... மனிதநேயப் போராளி ""தனியரசு"" தலைமையில்... வாரீர் இணைவீர்..... தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழர் பேரவை... தொடர்புக்கு: 9842202445, 9345212385.

Total Pageviews

Thursday, June 14, 2018

புதிய தலைமுறை மீதான வழக்கை திரும்பப்பெற சட்டப்பேரவையில் தீர்மானம் – தனியரசு

புதிய தலைமுறை மீதான வழக்குகளைத் திரும்பப்பெற சட்டப்பேரவையில் நாளை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருவேன் என கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறை சார்பில் கோவையில் வட்டமேசை விவாதம் நிகழ்ச்சி கடந்த 8ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தொடர்பாக கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புதிய தலைமுறை நிர்வாகம் மற்றும் அதன் செய்தியாளர் சுரேஷ் குமார், நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



இதுதொடர்பாக தாராபுரத்தில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, “மிகச்சிறந்த முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த கோவை வட்டமேசை விவாத நிகழ்ச்சியில் வேண்டுமென்றே குழப்பத்தை உண்டு பண்ணியவர்களை விடுத்து, புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் மீதும், அதன் செய்தியாளர் மீதும் வழக்கு புனைந்திருப்பது தவறு. வழக்குகளைத் திரும்பப்பெற நாளை நடைபெறும் சட்டப்பேரவை நிகழ்வில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருவேன்” என தெரிவித்துள்ளார்.


மதக்கலவரம் உருவாக் முயற்சித்த பாஜக! முறியடித்த கொங்கு இளைஞர்கள்!!

கோவை எஸ்.என்.ஆர். அரங்கில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் ‘தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக் காகவா? அரசியல் காரணங்களுக்காகவா?’ என்ற தலைப்பில் வட்டமேஜை விவாத நிகழ்ச்சி 08.06.2018 மாலை நடந்தது.
தூத்துக்குடி போராட்டத்திற்கு சமூகவிரோதிகள்தான் காரணம்….. போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியிருக்கின்றனர். 24 வருடமாக இந்த ஸ்டெர்லைட் ஆலை இருக்கத்தானே செய்தது. அப்போது போராடாதவர்கள் இப்போது ஏன் இப்படி போராடுகிறார்கள்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராடிய மக்கள் சமூக விரோதிகள் அல்ல. உண்மையான சமூக விரோதிகள் யார் தெரியுமா… சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஊர்வலமாக சென்று சட்டத்தை மதிக்காமல் பாபர் மசூதியை இடித்தார்களே அவர்கள்தான்.. என்றார்… அரங்கமே அதிரும் அளவிற்கு பார்வையாளர்கள் அந்த கருத்தை வரவேற்றனர்...
அதனை வன்மையாக கண்டிப்பதாக கூறி… ஏதோ பேச முயன்றார்.. அதற்கு பார்வையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஓசை எழுப்பினர்…
நாங்க ஒன்னும் ஆட்சி அதிகாரத்துக்காக போராடல, சுத்தமான காத்து, நீர், சுகாதாரமான வாழ்க்கை வேணும்ன்னு தான் போராடுரோம்... வன்முறை வழியில போராடணும்ன்னு எங்களுக்கு விருப்பம் இல்ல,
எங்களுடைய அன்பு சகோதரி செங்கொடி ஏழு தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தன்னைத் தானே மாய்த்துக்கொண்டாரே,
அது போன்று, உலகிலேயே யாருக்கும் இல்லாத அளவு இரக்க குணம் கொண்ட எங்களுடைய அன்பு தம்பி முத்துக்குமார் உலகமே வேடிக்கை பார்க்க அப்பாவி தமிழர்கள் மீதான படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி தீ க்கு இரை ஆகினானே அவனுடைய கோரிக்கை வென்றதா?
தமிழ்த்தாய் ஈன்றெடுத்த அறிவுக்குழந்தை அனிதா நீட்க்கு எதிராக தன்னை மாய்த்துக்கொண்டாரே அந்த கோரிக்கை வென்றதா?
தொடர்ந்து நாங்கள் அநீதிக்கு எதிராக போராடாமல் செங்கொடியை போல், முத்துக்குமாரை போல், அனிதாவை போல் தற்கொலை செய்து கொண்டே இருக்க வேண்டும்மா?
உலகிலேய அழகானவர், மென்மையானவர் என்று உங்களாலே சொல்லப்படும் ராமர் தோளிலே எதற்காக வில், அம்பு வைத்து உள்ளார். அந்த வில்லின் மூலம் அம்பை தொடுத்து அது வாலியின் நெஞ்சை பிளந்ததாக சொல்லப்படுகிறதே, அப்படியென்றால் ராமன் சமூக விரோதியா? முருகன் அசுரனை வதம் செய்தான் என்று சொல்கிறீர்களே! முருகன் சமூக விரோதியா?
போராடும் இன்றைய சமூக விரோதிகள்தான் நாளைய தலைவர்களாக வருவார்கள்.. ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றுவார்கள்.. என முடித்தார்..
கருவறையில் இருக்கும் குழந்தை கூட போராடித்தான் வெளியே வருகிறது…. மக்கள் அமைதியாக இருக்கத்தான் விரும்புகிறார்கள்.. ஆனால் ஆட்சியாளர்கள் விடுவதில்லை.. மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை.. அதுபோல ஆட்சியாளர்களும்..,
உடனே தமிழிசையும், பார்வையாளர்கள் பகுதிக்கு அழைத்து வரப்பட்டிருந்த பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர்… ( அமீர் கூறியதில் பாஜகவினருக்கு என்ன பிரச்சனை என்று பார்வையாளர்கள் குழப்பமடைந்தனர்.. ) அடுத்து ஏதோ அமீர் பேச முயன்ற போது அப்போதும் எதிர்ப்பு தெரிவித்தனர்…
பாஜகவினரை பார்த்து அமீர் பேசட்டும்.. அதற்கு அனுமதியுங்கள்.. அதற்கு பதில் தர தமிழிசை இருக்கிறார்… அவரும் பேசுவார் என கூறினார்..
அடுத்து #அமீர் :
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை செய்யப்பட்ட போது, கோவையில் கடைகள் சூறையாடப்பட்டன… போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன… அப்போது போலீசின் துப்பாக்கி எங்கே சென்றது.. என கேட்டு முடிக்கும் முன்
அரங்கின் பல்வேறு பகுதியில் அமர வைக்கப்பட்டிருந்த பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் மேடையை நோக்கி ஓடினர்… எங்களை பற்றி அமீர் பேசக்கூடாது என உடனே வேளியேற வேண்டும் என பாய்ந்தனர். அங்கிருந்து காவல்துறை மற்றும் புதிய தலைமுறை பணியாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்…
தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டனர்… நெறியாளர் உங்கள் தரப்பு மாற்று கருத்தை கூற அரங்கத்தில் தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் இருக்கிறார்கள் பொறுமையாக இருங்கள் என்று எவ்வளவோ கெஞ்சி பார்த்தார்..
ஆனால் சங்பரிவார் கூட்டம் கருமமே கண்ணாக எப்படியாவது நிகழ்ச்சியை ஊத்தி மூட வேண்டும் என்ற அடிப்படையில் தொடர் ரகளையில் ஈடுபட்டனர்.
அப்போது #நெறியாளர் தமிழிசையை அழைத்து உங்கள் அமைப்பினரை அமைதி படுத்துங்கள் என கூறி கையில் மைக்கை கொடுத்தார்…
ஆனால் #தமிழிசை மிகத் தெளிவாக, இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தால் நம் மீது கருத்தியல் ரீதியான அடி பலமாக இருக்கும்.. அரங்கத்தில் இருந்ததில் சங்பரிவார் அமைப்புகளை தவிர்த்த அனைவரும் நமக்கு எதிராக இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி முழுமையாக நடைபெற்று வெளிவந்தால்… பாஜக இன்னும் அம்பலப்பட்டு விடும் என்ற நிலையில் சுதாரித்த தமிழிசை மைக்கை பிடித்து…. இந்த கருத்தை நாம் அனுமதிக்க முடியாது.. நாம் உயிரை இழந்திருக்கிறோம்.. யார் அதை பற்றி பேசினாலும் அனுமதிக்க முடியாது. ஏற்றுக்கொள்ள முடியாது என மேலும் வெறியை ஊட்டினார்..
#ஞானதேசிகன்#கே_பி#டி_க_எஸ்_இளங்கோ உள்ளிட்டோர் சொல்லி பார்த்தனர் கேட்கவில்லை…
ஏதோ திட்டத்துடன்தான் பாஜகவினர் இப்படி செய்கிறார்கள் என்று அரங்கில் இருந்த பொதுமக்கள் பேசிக்கொண்டு இருக்க, கொதித்தெழுந்த #கொங்கு_இளைஞர்கள் உங்களுக்கு பிடித்தால் கேளுங்கள் இல்லையென்றால் வெளியே செல்லுங்கள் என்றும், அமீருக்கு ஆதரவு தெரிவித்தும் கூச்சல் போட்டனர். இதனால் பா.ஜனதா- கொங்கு இளைஞர் பேரவையினருக்கு இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
உடனே #தனியரசு வந்து தனது தொண்டர்களை பெயரை சொல்லி அழைத்து அமைதி காக்க வேண்டினார்.. அதனை தொடர்ந்து முன்பகுதி அமைதியாக இருந்தது.
உடனே மேடைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் நெறியாளரை தனியே அழைத்து உடனே நிகழ்ச்சியை முடியுங்கள்.. கலவரம் ஏற்பட்டு விடும்.. அனுமதிக்க முடியாது என கூறினர்.
இதற்கிடையில் கோவையின் பல்வேறு பகுதியில் இருந்த காவல்துறையினர், மற்றும் அதிரடிப்படையினர் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அருகில் இருந்த ஒரு உளவுத்துறை காவலரிடம் ஏன் இவ்வளவு போலீஸ் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர் எனக் கேட்ட போது, எப்படியாவது அமீரை தாக்கி அதன் மூலம் மீண்டும் கோவையில் ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டம் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. ஆகவே எப்படியாவது இந்த நிகழ்ச்சியை கலவரம் இன்றி முடித்திட வேண்டும். அதே நேரம் அமீரையும் பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும்.. அதற்காகத்தான்.. என்றார் நம்மிடம்…
நிகழ்ச்சி முடிந்த நிலையில் இயக்குநர் #அமீர் அவர்களையும்#கே_பாலகிருஷ்ணன் அவர்களையும் அழைத்துக்கொண்டு #தனியரசு அவருடைய காரில் முன்னும் பின்னும் கொங்கு இளைஞர் பேரவை தொண்டர்கள் பாதுகாப்புடன் விமான நிலையத்தை நோக்கி சென்றார்...
தங்கும் விடுதியில் தனியரசு, அமீர், பாலகிருஷ்ணன் ஆகியோர் 

நிகழ்ச்சி முடிந்து அனைவரும் கலைந்து செல்லும்போது, திருப்பூரைச் சேர்ந்த கொங்கு இளைஞர் பேரவையினர் சிலர் நான்கு கார்களில் திருப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது சூலூர் முதலிபாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்த போது அங்கு தயாராக நின்றிருந்த பாஜகவினர் பத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு, அந்தக் காரில்தான் அமீர் வருவதாக நினைத்து, காரை நிறுத்தி அரிவாள், கடப்பாறை, செங்கல் போன்றவற்றால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பாஜக வினரால் தாக்கப்பட்ட மகிழுந்து 


இதில் கார் பலத்த சேதமடைந்தது. காரில் வந்தவர்கள் இறங்கியவுடன் அதில் அமீர் இல்லாததைக்கண்டதும் அந்தக் கும்பல் தப்பியோடியது. அதைத்தொடர்ந்து கொங்கு இளைஞர் பேரவையினர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் கருமத்தம்பட்டி காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி பாஜகவை சேர்ந்த எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றார்.
எப்படியாவது கொங்கு மண்ணில் மதக்கலவரத்தை உருவாக்க வேண்டும், இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்களை துண்டிவிட வேண்டும் என்று நினைத்த பாஜகவினரின் சதியை இந்துக்களே (கொங்கு இளைஞர்கள்) முறியடித்தலால் கடும் ஆத்திரத்தில் செய்வதறியாது பாஜக, சங் பரிவார் கும்பல் திகைத்து நிற்கின்றனர்...



நாங்க இல்லாம யாரும் இந்த மண்ணுல இந்து கிடையாது - தனியரசு

நிலத்தை குடுத்து கோவிலை கட்டி கள்ள வெச்சு பூவ வெச்சு சுண்டல வெச்சு சாமிக்கு பாலும் தேனும் கொடுத்து இந்து கடவுள்களுக்கு உணவளிக்குற கொங்கு வெள்ளாள கவுண்டன பாத்தாடா இந்து விரோதின்னு சொல்ர...



செயல்வீரர்கள் கூட்டம்

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை யின் தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் மானமிகு #தனியரசு அவர்களின் தலைமையில் நடைபெற்றது...





03.06.2018
அரூர் ஒன்றியம், 
தருமபுரி  மாவட்டம்.

#Thaniyarasu 
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை யின் தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றியம், கருங்கல்பாடி, பெரியப்பட்டி கிளைகளில் கொடியேற்றி பெயர்ப்பலகை திறப்பு விழா மானமிகு #தனியரசு அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் தலைமையில் உறுப்பினர்கள் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது...

பெரியப்பட்டி கிளை 
பெரியப்பட்டி கிளை




28.05.2018
அரூர் ஒன்றியம், 
தருமபுரி  மாவட்டம்.

#Thaniyarasu 
ஊத்தங்கரை வட்டம், கீழ்குப்பம் கிராமத்தில் உள்ள பாலதண்டாயுதபானி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை யின் நிறுவனத் தலைவர், காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் மானமிகு அய்யா #தனியரசு அவர்களின் சார்பாக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை யின் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...
விழாவில் கலந்து கொண்ட இயக்க உறவுகள் 

வரவேற்பு பதாகை



27.05.2018
ஊத்தங்கரை ஒன்றியம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.

Friday, May 25, 2018

இயக்க இல்ல திருமண வரவேற்பு விழா... தனியரசு எம்.ஏ., எம்.எல்.ஏ., பங்கேற்பு...

      *✿════✿ தனியரசு ✿════✿*
       *┈┉━✿曆25.05.2018曆✿━┉┈*
        *┈┉✿ திருமண விழா ✿┉┈*
    *┈┉━✿ த҉மி҉ழ்҉ செ҉ய்҉தி҉க҉ள்҉҉  ✿━┉┈*
_____________________________________
சேலம் மாவட்டம், ஓமலூர் ஒன்றியம், நாலுகால்பாலம் கிளை யின் செயல்மறவர் இயக்க உறவு ப.கார்த்திக் - சு.கௌதமி அவர்களின் திருமண வரவேற்பு விழாவில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை யின் நிறுவனத் தலைவர், காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் இனமானப்போராளி., மானமிகு., தனியரசு எம். ஏ., எம்.ஏல்.ஏ அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்...
_____________________________________
https://m.facebook.com/story.php?story_fbid=1938278376196104&id=270533742970584
_____________________________________
https://twitter.com/K_Tamil_Arasan/status/999733288443920384?s=19
_____________________________________
      *✿════✿ தனியரசு ✿════✿*
   *┈┉━✿ த҉மி҉ழ்҉ செ҉ய்҉தி҉க҉ள்҉҉  ✿━┉┈*
               ✆ +91 9842202445
               ✆ +91 9345212385
____________________________________

Tuesday, May 22, 2018

குழந்தைகள் மாணவர்கள் அரசியல் பயிலரங்க  கூட்டம்... 21.05.2018

21‌.05.2018
ஊத்தங்கரை
__________________________________________

குழந்தைகள், மாணவர்கள் அரசியல் பயிலரங்க கூட்டம்...
__________________________________________

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை யின் சார்பில் ஊத்தங்கரை ஒன்றியம், கீழ் குப்பத்தில் குழந்தைகள், மாணவர்களுக்கான அரசியல் பயிலரங்க கூட்டம் பேரவை யின் நிர்வாகிகள் சார்பில் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது...

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பேரவையின் நிறுவனத் தலைவர் மானமிகு தனியரசு அவர்கள் கலந்து கொண்டார்...

குழந்தைகள், மாணவர்கள் அரசியல் பற்றிய தங்களது கருத்துகளை பதிவு செய்த பிறகு மானமிகு தனியரசு அவர்கள் பேசுகையில்...

இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள் எக்காரணம் கொண்டும் மது அருந்தக்கூடாது, புகை பிடிக்க கூடாது, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது, பொய் பேச கூடாது, ஒருவரை ஒருவர் ஏமாற்ற கூடாது, நம்முடைய இளைஞர்கள் பெரும்பாலும் மதுபழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது வேதனை அளிக்கிறது, மாறாக இளைஞர்களும், மாணவர்களும், குழந்தைகளும் அரசியல் பற்றிய சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும், எதிர்காலத்தில் நமக்கான அரசியல் மாற்றங்களை நாமே தீர்மானிக்கும் சக்தியாக மாற வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், தமிழ் மொழி பற்றிய நூல்கள், புத்தகங்கள், பிற வரலாற்று புத்தகங்கள், இந்திய விடுதலை வித்திட்ட உத்தம தியாகிகள் தீரன் சின்னமலை உள்ளிட்ட தலைவர்களின் வரலாறுகளையும் அவசியம் படிக்க வேண்டும், அரசியல் அமைப்புக்கள் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டும், தினம்தோறும் நாளிதழ் செய்திகளை படிக்க வேண்டும், அன்றாட அரசியல் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள வேண்டும், இயன்றவரை நன்றாக படிக்க வேண்டும், நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கின்ற அரசியலில் நாம் நேரடியாக பங்கேற்க வேண்டும் என்று பேசினார்...
__________________________________________

            ✿════✿ தனியரசு ✿════✿

           ┈┉━✿ த҉மி҉ழ்҉ செ҉ய்҉தி҉க҉ள்҉҉  ✿━┉┈

                 *✆ +҉҉҉  9҉҉҉ ‌ 8҉҉  4҉҉҉  2҉҉ 2҉҉ 0҉҉҉ 2҉҉ 4҉҉҉ 4҉҉҉ 5҉҉҉*

                 *✆ +҉҉҉  9҉҉҉ ‌ 3҉҉҉  4҉҉҉  5҉҉ 2҉҉  1҉҉҉ 2҉ 3҉҉ 8҉҉ 5҉҉*
__________________________________________

Tuesday, May 8, 2018

அஸ்சாம் மாநிலத்தில் தனியரசு

சட்டமன்ற ஆய்வு கூட்டத்தில் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் மானமிகு #தனியரசு அவர்கள் கலந்து கொண்டு #அஸ்சாம் சட்டமன்றத்தை பார்வையிட்டார்...

#அஸ்சாம்_மாநிலம்
07.05.2018

Monday, May 7, 2018

நீட் விஷயத்தில் மத்திய அரசிற்கு தமிழக அரசு துணை போயுள்ளது: தனியரசு குற்றச்சாட்டு

Posted By: T Nandhakumar
Updated: Sun, May 6, 2018, 18:23 [IST]

கோவை: நீட் தேர்வு மையம் அமைப்பதில் மத்திய அரசிற்கு தமிழக அரசு துணை போயுள்ளதாக கொங்கு இளைஞர் பேரவை  யின் நிறுவன தலைவர் தனியரசு குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த தனியரசு அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

நீட் கட்டாயம் என்பதே தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்தது. மாநில அரசு மத்திய அரசிற்கு நீட் மையம் அமைப்பதில் நெருக்கடி கொடுக்காமல் துணை போனது. நீட் தேர்வு மையம் வெளி மாநிலத்தில் கிடைத்த மாணவர்கள் உளவியல் ரீதியாகவும், மொழி , சூழ்நிலையால் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். எர்ணாகுளத்தில் தேர்வு எழுத சென்ற மாணவனின் தந்தை இறந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழர்களின் உரிமைகள் மற்றும் உயிரை பறிக்கும் பாஜக மன்னிக்க முடியாத குற்றத்தை செய்திருக்கிறது. இந்த விஷயத்தில் மாநில அரசின் இயலாமையை கண்டிக்கிறேன்.

தமிழகத்திலுள்ள ஏழு கோடி தமிழர்களும் சாதி, மதம், அரசியல் கடந்து நமது உரிமைகளுக்காக நீட்டை ஒழிக்கும் வரை போராட வேண்டும். இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை பாஜக கேள்வி குறியாக்கியுள்ளது. ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசிற்கு மாநில அரசு துணை போவதாக சந்தேகம் இருக்கிறது. முதலமைச்சர் மாநில உரிமைகாக அறவழிப்போராட்டம் நடத்தியிருந்தால் தேசம் தழுவிய கவனத்தை ஈர்த்து இருக்கும்.

மாநில உரிமை மீட்டெடுக்கும் வகையில் அவர் செயல்பட வேண்டும். நீட் தேர்விற்கு அனுமதிக்கும் போது மாணவர்களின் கையில் கட்டியுள்ள கயிறு, மத ரீதியாக உடுப்புகளை களைவது, வளையலை உடைப்பது ஜனநாயக போக்கிற்கு எதிரானது. இந்த ஏதேச்சை அதிகார போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.

முதலமைச்சர், மற்றும் துணை முதலமைச்சரை மோடி சந்திக்க நிராகரித்தால் அறவழியில் இருவரும் மத்திய அரசை கண்டித்து போராட வேண்டும். இதை தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்க வேண்டிய அதிமுகதான் முன்னெடுக்க வேண்டும். சட்டமன்றத்தில் போடப்பட்ட தீர்மானங்களையும், காவிரிக்கு எதிரான அனைத்து கட்சி தீர்மானத்தையும் மதிக்காத மத்திய அரசை கண்டித்து வலிமையான போராட்டத்தை மாநில அரசு முன்னெடுக்க வேண்டும் என்றார்.

#தனியரசு
#கோவை
06.05.2018

Sunday, May 6, 2018

விவசாயிகள் மாநாடு தனியரசு Mla பங்கேற்பு...

விவசாய நிலங்களில் உயர் அலுத்த மின்கோபுரம் அமைக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் கங்கேயம் சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் #தனியரசு அவர்கள் கலந்துகொண்டு கண்டன உறையாற்றினார்...

06.05.2018
ஈரோடு

Saturday, May 5, 2018

தனியரசு Mla பங்கேற்கும் அறம் பேசு...

06.05.2018 (ஞாயிறு) இரவு 08.00 மணிக்கு வெளிச்சம் தொலைக்காட்சி யில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை யின் நிறுவனத் தலைவர் மானமிகு தனியரசு அவர்கள் கலந்து கொண்ட அறம் பேசு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது காணத்தவறாதீர்கள்...

Thursday, May 3, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம், தனியரசு Mla பங்கேற்பு...

சென்னை சேப்பாக்கத்தில் மக்கள் அரசு கட்சியின் பொதுசெயலாளர் ஏ. பி. எஸ். செந்தில் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை யின் நிறுவனத்தலைவரும்,  காங்கேயம் சட்டமன்ற உறுப்பினருமான மானமிகு "தனியரசு" அவர்கள், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வன்னியரசு, தோழர் தியாகு மற்றும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்புச் சார்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்...

--------------------------------------------------------

03.05.2018
சேப்பாக்கம், சென்னை.

--------------------------------------------------------

https://twitter.com/K_Tamil_Arasan/status/991988183272321024?s=19

--------------------------------------------------------

https://www.instagram.com/p/BiT_rY7DrXv/

--------------------------------------------------------

https://wp.me/p17BBw-1A

--------------------------------------------------------

பேச : 9842202445, 9345212385.

--------------------------------------------------------

Wednesday, July 3, 2013

Tamilnadu Kongu Ilaingar Peravai

Tamilnadu Kongu Ilaingar Peravai in Tiruppur Maanagar matrum Pongalur Ondriyaththil Kodiyetri, Peyarpalagai Thirappu Vilaa... 7.7.2013

Sunday, May 26, 2013

Tamilnadu Kongu Ilaingar Peravai in Karur Maavattam, K.Paramathi Ondriyam, poondipalayam Kilai Kodiyetri, Peyarpalagai Thirappu Vilaa... 20.5.2013


Thalamai Manithaneyap Poraali U.Thaniyarasu M.A.,L.L.B.,MLA.,  Avargal...
Tamilnadu Kongu Ilaingar Peravai in Erode Maavattam, Anthiyur Ondriyam, Nalligoundan Puthur Kilai Kodiyetri, Peyarpalagai Thirappu Vilaa... 19.5.2013
Thalamai Inamaana Poraali U.Thaniyarasu M.A.,L.L.B.,MLA., Avargal

Thursday, April 25, 2013


சித்திரை முழு நிலவு நாள் ,


கற்புக்கரசி கண்ணகி திருவுருவச்சிலைக்கு 
மாண்புமிகு தமிழக சட்டமன்ற உறுப்பினர் 
திரு.உ.தனியரசு அவர்கள் 
மலர் தூவி மரியாதை செலுத்தினார்... 

Wednesday, April 17, 2013

தீரன் சின்னமலை சிலைக்கு ஜெயலலிதா மலர்தூவி மரியாதை, விழா மலரையும் வெளியிட்டார்.


சென்னை
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி சென்னை, கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அவரது சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா, மலர் தூவி மரியாதை செலுத்தி, விழா மலரையும் வெளியிட்டார்.

விழாவில் பங்கேற்று, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்ற கொங்கு இளைஞர் பேரவை தொண்டர்கள்
மற்றும் பல்வேறு அமைப்புகளைச்சேர்ந்த தொண்டர்கள்
ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாய்...
இந்திய விடுதலை போரில் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து போராடியவர் தீரன் சின்னமலை. சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் ‘‘இடையே ஒரு சின்னமலை’’ என்று போற்றப்பட்டவராய், தீரத்துடன் செயல்பட்டு ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.
தீரன் சின்னமலையின் தியாகத்தை போற்றி நினைவு கூறும் வகையிலும், அவரது வீரதீர செயல்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளத்தக்க வகையிலும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தீரன் சின்னமலைக்கு வெண்கலச் சிலை அமைத்தல், மணி மண்டபம் அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
கிண்டியில் உள்ள சிலை புனரமைப்பு
சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் சிலை பொலிவிழந்தும் அதன் பீடம் மற்றும் சுற்றுப்புறத் தரை மிகவும் சிதிலமடைந்தும் இருந்ததை சீர்செய்து, தற்போது 10 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்து புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டுள்ளது.
தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச் சிலை வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டதுடன் அதன் சுற்றுப்பகுதியின் பாதுகாப்புக்கு அலங்கார கிரில், மதில்சுவர் அமைக்கப்பட்டு தரையில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு விவரங்கள் அடங்கிய பலகை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

மலர்தூவி மரியாதை
மேலும், தீரன் சின்னமலையின் 258–வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, தீரன் சின்னமலை பேரவை சார்பாக தொகுக்கப்பட்ட தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா மலரை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட, சட்டமன்ற உறுப்பினரும், கொங்கு இளைஞர் பேரவை தலைவருமான உ.தனியரசு பெற்றுக்கொண்டார்.
அமைச்சர்கள்
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பழனியப்பன், செந்தில்பாலாஜி, தாமோதரன் உள்பட அமைச்சர்கள், மேயர் சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செங்கோட்டையன், செந்தமிழன், மகளிர் மேம்பாட்டு ஆணைய தலைவி டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர், அரசு உயர் அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தீரன் சின்னமலை சிலைக்கு, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜெயராமன், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழக பொதுச்செயலாளர் ச.இசக்கிமுத்து மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்..
ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு
கிண்டி மேம்பாலத்தில் இருந்து ஏறக்குறைய 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு, அ.தி.மு.க., கொங்கு இளைஞர் பேரவை கொடிகளும், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்று மிகப்பெரிய தட்டிகளும் வைக்கப்பட்டு இருந்தது. சாலையின் இருபுறமும், கொங்கு இளைஞர் பேரவை கொடியை கையில் உயர்த்திப்பிடித்தவாறு, கொங்கு இளைஞர் பேரவை  தொண்டர்கள் ஏராளமானோர் ஜெயலலிதாவை வரவேற்பதற்காக காத்திருந்தார்கள். விழா நடைபெற்ற இடத்துக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா வந்ததும், அங்கு திரண்டிருந்த கொங்கு இளைஞர் பேரவையினர்  விண்அதிர வாழ்த்துமுழக்கமிட்டு உற்சாகமாக வரவேற்றார்கள்.

Tuesday, February 26, 2013

மோசடி நிறுவனங்கள் பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும் - தனியரசு வலியுறுத்தல்


மோசடி நிறுவனங்கள் பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும்-தனியரசு Mla [tamilnadu kongu ilaingar peravai]வலியுறுத்தல்

Tuesday, November 27, 2012

Thaniyarasu MLA தனியரசு

தனியரசு உ {சட்டமன்ற உறுப்பினர்}, பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி,

Thaniyarasu MLA {Member Of Legislative Assembly}, ParamathiVelur Constituency,


தனியரசு MLA அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது