நாம் அரசியல் அதிகாரம் பெற, பொருள் இழப்போம், சிறை ஏற்ப்போம், உயிர் துறப்போம், மானமிகு... மனிதநேயப் போராளி ""தனியரசு"" தலைமையில்... வாரீர் இணைவீர்..... தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழர் பேரவை... தொடர்புக்கு: 9842202445, 9345212385.

Total Pageviews

Monday, October 4, 2010

டாஸ்மாக் மதுக் கடைகளை மூட கொங்கு இளைஞர் பேரவை வலியுறுத்தல்
01 Mar 2010 07:35:00 AM IST

தருமபுரி,​​ பிப்.​ 28:​ தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
​ பேரவையின் தருமபுரி மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரி பெரியார் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.​ ​
​ பென்னாகரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து மாநில அமைப்பின் இறுதி முடிவை ஏற்பது.​ ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் அதிகரித்துவரும் என்கவுண்டர்கள் குறித்து ஆய்வு செய்ய நீதிபதிகள் குழு அமைக்க வேண்டும்.​ தருமபுரியில் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
​ கூட்டத்துக்கு மாநில
செயற்குழு உறுப்பினர் பொன்னுசாமி கவுண்டர் தலைமை தாங்கினார்.​ மாநில அமைப்பாளர் உ.தனியரசு.​ மாவட்ட அமைப்பாளர் பிரபாகரன்,​​ நகர அமைப்பாளர் மாசிலாமணி உள்ளிட்டோர் பேசினர்.

© Copyright 2008 Dinamani