நாம் அரசியல் அதிகாரம் பெற, பொருள் இழப்போம், சிறை ஏற்ப்போம், உயிர் துறப்போம், மானமிகு... மனிதநேயப் போராளி ""தனியரசு"" தலைமையில்... வாரீர் இணைவீர்..... தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழர் பேரவை... தொடர்புக்கு: 9842202445, 9345212385.

Total Pageviews

Monday, October 4, 2010

"கேரளா அரசு தன்னிச்சையாக செயல் பட்டால் தமிழகத்துடன் இணைக்க வலியுறுத்துவோம்"-உ.தனியரசு {Thaniyarasu}



"தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை கேரளா அரசு பறிக்க
நினைத்தால் கேரளாவை தமிழகத்துடன் இணைக்க வேண்டும்
என்று வலியுறுத்தும் சூழ்நிலை உருவாகும்," என்று
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர்
உ.தனியரசு பேசினார்.
பொள்ளாச்சி அடுத்த கோபாலபுரத்தில் ம.தி.மு.கா., உள்ளிட்ட
அமைப்புகள் சார்பில் நடந்த மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு
கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் உ.தனியரசு
தலைமை வகித்தார். போரட்டத்தில் அவர் பேசியதாவது;
கேரளா அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்யும் விதமாக
ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.முல்லை
பெரியாறு அணை விவகாரத்தில் சுப்ரீம்  கோர்ட் உத்தரவை
அமல்படுத்தாமல் முரண்டு பிடித்து தனி மாநிலமாக செயல்படுகிறது.
முல்லை பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும்
என்று தமிழகம்வலியுறுத்தும் நிலையில், அந்த அணையை இடிக்க
வேண்டும்என்று கேரளா அரசு கூறுகிறது.
அமராவதியின் நீர்ஆதாரமான பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டி,
தண்ணீரை கேரளாவுக்கு திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது
கேரளா அரசு. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தமிழகத்தின்
இயற்கை  பாதுகாக்கும் முல்லை பெரியாறு, பாம்பாறு, நெய்யாறு,
செண்பகவல்லி ஆறு, பவானி ஆறு, ஆழியாறு திட்டங்களில்
கேரளா அரசு தமிழகத்துக்கு பல்வேறு டையூறுகளை செய்கிறது.
கேரளா அரசு தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றிக்
கொள்ளாவிட்டால்,
விட்டால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு காய்கறி, பால்,
அரிசி, ஆடு, மாடு, கோழி, உள்ளிட்ட எதுவும் கொண்டு செல்ல
விடமாட்டோம். தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளாவிற்கு
மின்சாரம் வழங்க அனுமதிக்க மாட்டோம்.
கேரளா அரசை கண்டித்தும் , தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படும்
போது வேடிக்கை பார்க்கும் தமிழக அரசையும், மத்திய அரசையும்
கண்டித்தும் மறியல் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தால்
தமிழக மக்களும், கேரளா மக்களும் விழிப்புணர்வு பெற வேண்டும்.
கேரளா அரசு தன்னிச்சையாக செயல்பட்டு தமிழகத்தின் ஜீவாதார
உரிமைகளை பறிக்க நினைத்தால், கேரளாவை தமிழகத்துடன்
இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் சூழ்நிலை உருவாகும்.
தமிழகத்துடன் இணைவதற்கு கேரளா மக்களும் விரும்புகின்றனர்.
இவ்வாறு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர்
உ.தனியரசு பேசினார்.
சாலைமறியலில் ஈடுபட்ட கொங்கு இளைஞர் பேரவை
மாநில அமைப்பாளர் உ.தனியரசு உட்பட 750 மேற்பட்டவர்களை
போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.