நாம் அரசியல் அதிகாரம் பெற, பொருள் இழப்போம், சிறை ஏற்ப்போம், உயிர் துறப்போம், மானமிகு... மனிதநேயப் போராளி ""தனியரசு"" தலைமையில்... வாரீர் இணைவீர்..... தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழர் பேரவை... தொடர்புக்கு: 9842202445, 9345212385.

Total Pageviews

Monday, October 4, 2010

                                 ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்பு: 50 பேர் கைது

                                     First Published : 09 Jun 2010 12:56:36 PM IST


நாமக்கல், ஜூன் 8:  இலங்கை அதிபர் ராஜபட்ச, இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வரவேற்பு அளிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.


இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், நாமக்கல் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் கொங்கு இளைஞர் பேரவையினர், மதிமுக-வினர், தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மதிமுக மாவட்ட செயலர் டி.என். குருசாமி தலைமை வகித்தார். கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட துணைச் செயலர் கௌரி சங்கர், மதிமுக தேர்தல் பணிக்குழு துணைத் தலைவர் வழக்கறிஞர் பழனிசாமி, நகரச் செயலர் புகழேந்திரன், மாவட்ட அமைப்பாளர் கணேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கைகளில் கறுப்பு கொடி ஏந்தி கலந்து கொண்டனர்.

 மத்திய அரசைக் கண்டித்தும், ராஜபட்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கொங்கு இளைஞர் பேரவையைச் சேர்ந்த 20 பேர், மதிமுக-வினர் 30 பேர் என மொத்தம் 50 பேரை போலீஸôர் கைது செய்தனர்.