ஊத்தங்கரையில் உத்தமபுத்திரன் சினிமாபடத்துக்கு எதிராக கொங்கு இளைஞர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
Krishnagiri வியாழக்கிழமை, நவம்பர் 11, 5:43 PM IST
ஊத்தங்கரை, நவ. 11-
நடிகர் தனுஷ்- ஜெனிலியா நடித்து வெளியான உத்தமபுத்திரன் படத்தில் கவுண்டர்கள் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டதாக கூறி பல இடங்களில் அந்த படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முன்பு கவுண்டர்கள் இனத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஊத்தங்கரையிலும் உத்தமபுத்திரன் திரையிடப்பட்டிருந்த தியேட்டர் முன்பு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் பிரகாசம் தலைமை தாங்கினார். இதில் ஆட்சேபத்திற்குரிய காட்சிகளை நீக்ககோரி கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் அன்பு, ஆனந்து, ராதா, தாமோதரன், வேலுசாமி, சிவனேசன், விஜியகுமார், உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.