லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு நிபந்தனை கொங்கு பேரவையும் களத்தில் குதிக்கிறது
ஜனவரி 05,2009,00:00 IST
உடுமலை:"பூரண மதுவிலக்குக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளுடன் லோக்சபா தேர்தல் கூட்டணி அமைக்கப்படும்; உடன்பாடு எட்டாவிட்டால் கொங்கு இளைஞர் பேரவை எட்டு தொகுதிகளில் தனித்து போட்டியிடும்' என, கொங்கு இளைஞர் பேரவையின் மாநில அமைப்பாளர் தனியரசு பேசினார்.உடுமலை ஒன்றியத்தில் கொங்கு இளைஞர் பேரவை சார்பில், எலையமுத்தூர் உட்பட பல இடங்களில் கிளை துவக்க விழா, பொதுக் கூட்டம் நடந்தது.
விழாவில் பங்கேற்ற கொங்கு இளைஞர் பேரவையின் மாநில அமைப்பாளர் தனியரசு பேசியதாவது:கொங்கு இளைஞர் பேரவைக்கு தமிழகத்தில் 5,000 கிளைகள் உள்ளன. கிளை களில் 10 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலத்தில் பூரண மது விலக்கை செயல் படுத்த அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அரசு, விவசாயிகளுக்கு செயல்படுத்தியுள்ள கடன் தள்ளுபடி, இலவச மின்சார திட்டம் ஆகியவற்றை வரவேற்கிறோம்.விவசாயிகளின் விளை பொருட்களை சந்தைப் படுத்த மாநிலம் முழுவதும் பதப்படுத்தல் மையங்களை அரசு துவக்க வேண்டும்.
கரும்பு டன்னுக்கு 2,000 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும். உரத்தட்டுப்பாடு, பால் விலை குறித்து அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தீண்டாமை ஒழிப்பு சட்டம் பல இடங்களில் தவறான முறையில் கையாளப்படுகிறது. எனவே, அரசு இச்சட்டத்தில் திருத் தம் கொண்டு வர வேண்டும்.ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தி கொங்கு வேளாளர் களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். இலங்கை தமிழர்கள் போரால் பாதிக்கப்படு வதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமங்கலம் இடைத்தேர்தலில், கொங்கு இளைஞர் பேரவை உட்பட அனைத்து கவுண்டர் அமைப்பு சார்பில் தி.மு. க.,வுக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் பூரண மதுவிலக்கை செயல்படுத்துவதாக அறிவிக்கும் அரசி யல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும். இல்லாவிடில், கணிசமான ஓட்டு வங்கி உள்ள எட்டு தொகுதி களில் போட்டியிட வாய்ப்புள்ளது. தேர்தலில் போட்டி, கள் இறக்கு தல் மற்றும் கட்சியின் இதர முக்கிய நடவடிக்கைகள் குறித்து வரும் மார்ச் 14ம் தேதி நாமக்கலில் நடக்கும் மாநாட்டில் தீர்மானிக்கப்படும். இவ்வாறு தனியரசு பேசினார். உடுமலை ஒன்றியத்தின் பல இடங்களில் கிளை துவக்க விழா நடந்தது. ஒன்றிய நிர்வாகி ஜெயபிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.