நாம் அரசியல் அதிகாரம் பெற, பொருள் இழப்போம், சிறை ஏற்ப்போம், உயிர் துறப்போம், மானமிகு... மனிதநேயப் போராளி ""தனியரசு"" தலைமையில்... வாரீர் இணைவீர்..... தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழர் பேரவை... தொடர்புக்கு: 9842202445, 9345212385.

Total Pageviews

Friday, March 11, 2011

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொங்கு இளைஞர் பேரவையினர் “திடீர்” உண்ணாவிரதம்: நிர்வாகிகள்-தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு


Salem திங்கட்கிழமை, டிசம்பர் 20, 7:18 PM IST
சேலம், டிச. 20-
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொங்கு இளைஞர் பேரவையினர்
 “திடீர்” உண்ணாவிரதம்:  நிர்வாகிகள்-தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சேலம் மாவட்ட செயலாளர்செல்லதுரை, கரூர் மாவட்ட செயலாளர் கார்வேந்தன், சேலம் மாவட்ட அமைப்பாளர் ரங்கநாதன். தொண்டர் அணி செயலாளர் அழகிரி, பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் காமராஜ், பெரியசாமி, கரூர் மாவட்ட மகளிர் அணி செல்வி மற்றும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 7 பேர் உள்பட மொத்தம் 72 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைபார்க்க இன்று காலை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்கள் திரளாக சேலம் மத்திய சிறை முன்பு திரண்டனர்.அவர்கள் சிறைக்கு சென்று இவர்களை பார்க்க மனு செய்த போது சிறை அதிகாரிகள் கைதாகி சிறையில் இருக்கும் நிர்வாகிகள், உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இதனால் நீங்கள் சிறைக்குள் சென்று பார்க்க முடியாது என்றனர்.
இதனால் நிர்வாகிகள், தொண்டர்கள் ஜெயில் முன்பு திரண்டு இருந்தனர். இதனால் பரபரப்பு நிலவியது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகள் கூறும் போது, போலீசார் வேண்டும் என்றே நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும், பொய் வழக்கு போட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.