நாம் அரசியல் அதிகாரம் பெற, பொருள் இழப்போம், சிறை ஏற்ப்போம், உயிர் துறப்போம், மானமிகு... மனிதநேயப் போராளி ""தனியரசு"" தலைமையில்... வாரீர் இணைவீர்..... தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழர் பேரவை... தொடர்புக்கு: 9842202445, 9345212385.

Total Pageviews

Friday, March 11, 2011

கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகள் ஏழு பேர் கைது


பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2010,02:33 IST
பனமரத்துப்பட்டி: கொங்கு நாடு முன்னேற்ற கழகம் சார்பில், இன்று (19ம் தேதி) கரூரில் விவசாயிகள் அரசியல் உரிமை மாநாடு நடக்கிறது. அதற்கு, அழைப்பு விடுத்து, சேலம் மல்லூரை அடுத்த தொட்டி வலசு பகுதியில் கொங்கு நாடு முன்னேற்ற கழகம் சார்பில் வைக்கப்பட்டிருந்த  விளம்பர பேனர் கிழித்து எறியப்பட்டது. அதற்காக பனமரத்துப்பட்டி ஓன்றிய கொங்கு இளைஞர் பேரவை அமைப்பாளர் காமராஜ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.  கொங்கு நாடு முன்னேற்ற கழக நிர்வாகிகளுக்கும், கொங்கு இளைஞர்  பேரவை நிர்வாகிகள் இடையே  மோதல் ஏற்படும் சூழல் உருவானது.


கொங்கு இளைஞர் பேரவை அமைப்பாளர் காமராஜ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அந்த பேரவை சார்பில் போராட்டம் நடத்த நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதனால், முன்னெச்சரிக்கையாக பனமரத்துப்பட்டி நகர கொங்கு இளைஞர் பேரவை செயலாளர் மணிவண்ணன், அடிக்கரை தனபால், நிர்வாகிகள் சேகர், மணிகண்டன், முருகேசன்,சிவக்குமார், மல்லூரை சேர்ந்த பெரியசாமி உள்ளிட்ட ஏழு பேரை பனமரத்துப்பட்டி எஸ்.ஜ., ராஜு கைது செய்தார்.