நாம் அரசியல் அதிகாரம் பெற, பொருள் இழப்போம், சிறை ஏற்ப்போம், உயிர் துறப்போம், மானமிகு... மனிதநேயப் போராளி ""தனியரசு"" தலைமையில்... வாரீர் இணைவீர்..... தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழர் பேரவை... தொடர்புக்கு: 9842202445, 9345212385.

Total Pageviews

Saturday, March 12, 2011

கொங்கு இளைஞர் பேரவைக்கு அதிமுக அணியில் ஓர் இடம்: ஜெயலலிதா


First Published : 12 Mar 2011 12:53:57 AM IST

தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்துடன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் உ.தனியரசு.
சென்னை, மார்ச் 11: அ.தி.மு.க. அணியில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன அமைப்பாளர் உ. தனியரசு உள்ளிட்ட நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது கொங்கு இளைஞர் பேரவைக்கு ஒரு தொகுதி ஒதுக்குவது என உடன்பாடானது.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் ஜெயலலிதா, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவன அமைப்பாளர் உ. தனியரசு கையெழுத்திட்டனர்.
ஏற்கெனவே அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க.வுக்கு 41, மனித நேய மக்கள் கட்சிக்கு 3, புதிய தமிழகம் கட்சிக்கு 2, சமத்துவ மக்கள் கட்சிக்கு 2, இந்திய குடியரசு கட்சி, பார்வர்டு பிளாக், மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 52 தொகுதிகளை அதிமுக ஒதுக்கி உள்ளது. எஞ்சிய 182 தொகுதிகள் உள்ளன. இதில் இப்போது அதிமுக அணியில் உள்ள மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டதுபோக எஞ்சிய இடங்களில் அதிமுக போட்டியிடும்.
Thanks For,