பாமக எம்எல்ஏ உள்பட 200 பேர் கைது
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்டசபை தொகுதியில் பாமக சார்பில் வடிவேல், அதிமுக கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் தனியரசு ஆகியோர் போட்டியிட்டனர்.
இத்தொகுதியில் நேற்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. குப்புச்சிபாளையம் வாக்குசாவடிக்கு நேற்று மாலை அதிமுகவினர் சிலர் காரில் வயதான ஒரு முதியவரை அழைத்து வந்துள்ளனர். இதற்கு அங்கிருந்த பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. வாக்குச்சாவடி முன்பு இரு கட்சியினரும் மோதிக் கொண்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.
இதில் சம்பூர்ணம் என்ற மூதாட்டி காயம் அடைந்தார். ஆத்திரம் அடைந்த பாமகவினர், பரமத்திவேலூர் டவுனில் திடீர் ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கினர்.
இதில் சம்பூர்ணம் என்ற மூதாட்டி காயம் அடைந்தார். ஆத்திரம் அடைந்த பாமகவினர், பரமத்திவேலூர் டவுனில் திடீர் ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கினர்.
லாரி டயரை நடுரோட்டில் வைத்து எரித்தனர். வன்முறையில் அதிமுக நகர செயலாளர் பொன்னிவேல் காயம் அடைந்தார்.
பாமகவினரை கண்டித்து அதிமுக மற்றும் கொங்கு இளைஞர் பேரவையினர் 300&க்கும் மேற்பட்டோர் பரமத்திவேலூர் பைபாஸ் சாலையில் நேற்றிரவு திடீர் மறியலில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 2 பஸ்களின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பஸ்கள் நிறுத்தப்பட்டன.
சம்பவ இடத்துக்கு கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சிவனாண்டி, சேலம் டிஐஜி வெங்கட்ராமன், நாமக்கல் எஸ்.பி. பிரவேஸ்குமார், தர்மபுரி எஸ்.பி. சுதாகர் ஆகியோர் விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இரவு 11 மணியளவில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதையடுத்து எம்எல்ஏ நெடுஞ்செழியன் உள்பட 200 பாமகவினரை போலீசார் கைது செய்தனர்.
மோதல், வன்முறை தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து பரமத்திவேலூரில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=51795