சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசியதாவது: தனியரசு - கொங்கு இளைஞர் பேரவை: மாநில நதிகள் இணைப்புக்கு முக்கியத்துவம், இலவச மடிக்கணினி, இலவச மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட அறிவிப்புகள் பாராட்டுக்குரியவை. குற்றம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, மிகச்சிறப்பு கவர்னர் உரையாக இது அமைந்துள்ளது.
மேற்கு மண்டலத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தி.மு.க., ஆட்சியில் எந்த வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. அதனால் தான் மேற்கு மண்டலத்தில் அ.தி.மு.க., யார் தயவுமின்றி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானமும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றி முதல்வர் ஜெயலலிதா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
Thanks