திருச்சங்கோடு: இந்தியா வல்லரசு என்ற பெருமையை பெற வேண்டும் எனில் இளைஞர்கள் பொது வாழ்க்கைக்கு வந்து உழைக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் அமைப்பாளரும், பரமத்திவேலூர் தொகுதி MLA வும்மான தனியரசு.
கொங்கு இளைஞர் பேரவையின் கொடியேற்றுவிழா மற்றும் அமைப்பின் பெயர்பலகை திறப்புவிழா நிகழ்சிகள் எலச்சிபலயம் ஒன்றிய பகுதிகளில் நேற்று நடந்தது. கொன்னையார், ஆலங்காடு புத்தூர், எலச்சிபலயம், குமாரமங்கலம், 87 கவுண்டம்பாளையம் பகுதியில் நடந்த நிகழ்சியில் தனியரசு பேசியதாவது:-
எத்தனை குடியரசுதினம் கொண்டாடினாலும் இன்னும் தீண்டாமையை ஒழித்து, சாதிய, மத பாகுபாடின்றி, அனைத்து மக்களும், அனைத்து வளங்களையும் பெற்று சகோதரத்துடன் வாழமுடியாத நிலை உள்ளது. ஒரு தேசத்தின் விடுதலையை, முன்னேற்றத்தை மறு சீரமைப்பு செய்து, உலகில் சிறந்த வல்லரசு நாடு இந்தியா என்ற பெருமையை இளைஞர்கள் தான் பெற்று தரவேண்டும்.
இது இளைஞர்களின் காலம்.
சாதிக்க துடிக்கும்
இளைஞர்கள் சமுகநலனில் அக்கறை கொண்டு பொது பணிக்கு வர வேண்டும் என பேசினார்.
