நாம் அரசியல் அதிகாரம் பெற, பொருள் இழப்போம், சிறை ஏற்ப்போம், உயிர் துறப்போம், மானமிகு... மனிதநேயப் போராளி ""தனியரசு"" தலைமையில்... வாரீர் இணைவீர்..... தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழர் பேரவை... தொடர்புக்கு: 9842202445, 9345212385.

Total Pageviews

Monday, May 7, 2018

நீட் விஷயத்தில் மத்திய அரசிற்கு தமிழக அரசு துணை போயுள்ளது: தனியரசு குற்றச்சாட்டு

Posted By: T Nandhakumar
Updated: Sun, May 6, 2018, 18:23 [IST]

கோவை: நீட் தேர்வு மையம் அமைப்பதில் மத்திய அரசிற்கு தமிழக அரசு துணை போயுள்ளதாக கொங்கு இளைஞர் பேரவை  யின் நிறுவன தலைவர் தனியரசு குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த தனியரசு அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

நீட் கட்டாயம் என்பதே தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்தது. மாநில அரசு மத்திய அரசிற்கு நீட் மையம் அமைப்பதில் நெருக்கடி கொடுக்காமல் துணை போனது. நீட் தேர்வு மையம் வெளி மாநிலத்தில் கிடைத்த மாணவர்கள் உளவியல் ரீதியாகவும், மொழி , சூழ்நிலையால் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். எர்ணாகுளத்தில் தேர்வு எழுத சென்ற மாணவனின் தந்தை இறந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழர்களின் உரிமைகள் மற்றும் உயிரை பறிக்கும் பாஜக மன்னிக்க முடியாத குற்றத்தை செய்திருக்கிறது. இந்த விஷயத்தில் மாநில அரசின் இயலாமையை கண்டிக்கிறேன்.

தமிழகத்திலுள்ள ஏழு கோடி தமிழர்களும் சாதி, மதம், அரசியல் கடந்து நமது உரிமைகளுக்காக நீட்டை ஒழிக்கும் வரை போராட வேண்டும். இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை பாஜக கேள்வி குறியாக்கியுள்ளது. ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசிற்கு மாநில அரசு துணை போவதாக சந்தேகம் இருக்கிறது. முதலமைச்சர் மாநில உரிமைகாக அறவழிப்போராட்டம் நடத்தியிருந்தால் தேசம் தழுவிய கவனத்தை ஈர்த்து இருக்கும்.

மாநில உரிமை மீட்டெடுக்கும் வகையில் அவர் செயல்பட வேண்டும். நீட் தேர்விற்கு அனுமதிக்கும் போது மாணவர்களின் கையில் கட்டியுள்ள கயிறு, மத ரீதியாக உடுப்புகளை களைவது, வளையலை உடைப்பது ஜனநாயக போக்கிற்கு எதிரானது. இந்த ஏதேச்சை அதிகார போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.

முதலமைச்சர், மற்றும் துணை முதலமைச்சரை மோடி சந்திக்க நிராகரித்தால் அறவழியில் இருவரும் மத்திய அரசை கண்டித்து போராட வேண்டும். இதை தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்க வேண்டிய அதிமுகதான் முன்னெடுக்க வேண்டும். சட்டமன்றத்தில் போடப்பட்ட தீர்மானங்களையும், காவிரிக்கு எதிரான அனைத்து கட்சி தீர்மானத்தையும் மதிக்காத மத்திய அரசை கண்டித்து வலிமையான போராட்டத்தை மாநில அரசு முன்னெடுக்க வேண்டும் என்றார்.

#தனியரசு
#கோவை
06.05.2018