கொங்கு இளைஞர் பேரவை சார்பில் கரூரில் இன்று ரத்த தான முகாம்
First Published : 03 Aug 2009 07:17:40 AM IST
கரூர், ஆக.2: தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் தீரன் சின்னமலைக் கவுண்டர் நினைவு நாள் நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை கரூரில் நடைபெறுகின்றன.
தீரன்சின்னமலை கவுண்டரின் 204-வது நினைவு நாளை முன்னிட்டு கரூரில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் மாவட்ட அலுவலகத்தில் ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 10 மணிக்கு கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் நினைவு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர். ஆக.3-ம் தேதி நாமக்கல் குளக்கரைத் திடலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உ. தனியரசு பேசுகிறார். நிகழ்ச்சிகளில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென கொங்கு இளைஞர் பேரவை கரூர் மாவட்ட அமைப்பாளர் த. கார்வேந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.