கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகள் வீடுகளில் விசாரணை
நவம்பர் 15,2009,00:00 IST
பழநி : அரசு பஸ்கள் மீது கல்வீச்சு தொடர்பாக கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகள் வீடுகளில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் தனியரசு கார் மீது நிலக்கோட்டை அருகே தாக்குதல் நடந்தது. இதன் எதிரொலியாக பழநி அருகே தனியார், அரசு பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது. இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். திண்டுக்கல் எஸ்.பி., சின்னச்சாமி தலைமையில் பழநியில் போலீஸ் பாதுகாப்பு நீடிக்கிறது.
வீடுகளில் விசாரணை: இளைஞர் பேரவை மாவட்ட நிர்வாகிகள் வீடுகளில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிர்வாகிகள் எங்கு, எப்போது சென்றனர் என கேட்ட போலீசார், வீட்டிற்கு அவர்கள் வந்தால் அருகில் உள்ள ஸ்டேஷன்களில் நேரில் ஆஜராக கூறுமாறு தகவல் தந்துள்ளனர்.