கொங்கு இளைஞர் பேரவை உண்ணாவிரதம்
ஜனவரி 18,2011,23:03 IST
கோவை : காளப்பட்டி பேரூராட்சியை கண்டித்து, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் உண்ணாவிரதம் இருந்தனர்.காளப்பட்டி 4வது வார்டு, மயானம் செல்லும் ரோட்டில் சாக்கடை கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்வீசுகிறது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது, இதை சீர்செய்ய வேண்டும். பேரூராட்சிக்கு
எதிர்புறம் உள்ள குளத்திலிருந்து கைக்கோளாபாளையம் செல்லும் ரோட்டில் களத்துக்கு நீர் செல்லும் பாதையில் சாக்கடை மற்றும் மனித கழிப்பிட கழிவுகளை கொண்டு சேர்ப்பதை தடுக்க வேண்டும்.
இப்பகுதியில் தேங்கும் கழிவுகளை பெரியபள்ளம் வழியாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தொற்றுநோய் பரவாமலும், நீர் தேங்காமலும் இருக்க வாரம் இருமுறை கொசு மருந்து மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காளப்பட்டி பகுதியிலுள்ள குளங்களிலிருந்து மண்ணை தோண்டி எடுக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. உண்ணாவிரதத்துக்கு, முருகேசன் தலைமை வகித்தார். வக்கீல் முருகேஷ் துவக்கி வைத்தார். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர்பொதுமக்கள் இதில் பங்கேற்றனர்.