கொங்கு இளைஞர் பேரவைக் கூட்டம்
First Published : 01 Nov 2010 11:45:30 AM IST
பழனி, அக். 31: பழனியில் கொங்கு இளைஞர் பேரவையின் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பழனி-திண்டுக்கல் சாலை தீபம் வளாகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்துக்கு, மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் தனியரசு சிறப்புரையாற்றியதாவது:
உழவுத்தொழிலை பூர்வீகமாகச் செய்து வரும் கோடிக்கணக்கான வேளாளர், கொங்கு கவுண்டர் இனத்தினர், வரும் காலத்தில் தங்களுக்கென உரிமைகளைக் கேட்டு பெறவே இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது, பல்வேறு கட்சிகளும் நம்மை கூட்டு இயக்கமாக அழைத்துப் பேசும் அளவுக்கு நமது அமைப்பு வளர்ந்துள்ளது.
நமது அமைப்பு, சாதிய உணர்வு இன்றி, தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும், மொழியைக் காப்பாற்றவும் போராடி வருகிறது. இதனாலேயே வெகுஜன மக்களால் ஈர்க்கப்பட்டு, அரசியல் அமைப்பாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் இடமான ஒகேனக்கல்லில் கர்நாடக மாநிலக் கொடியை நாட்டி, அங்கு வாட்டாள் நாகராஜ் ஏற்படுத்தி வரும் பிரச்னையைக் கண்டித்து நவ. 2-ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டக் கூட்டம், அமைப்பின் சார்பில் நடத்தப்படவுள்ளது.
மது இல்லாத தமிழகத்தை மட்டுமின்றி, இந்தியாவையும் அவ்வாறு மாற்றவேண்டும் என்றார்.
புதிய நிர்வாகிகளாக, பழனி நகரத் தலைவராக கண்ணன், செயலராக ஈஸ்வரன், பொருளாளராக முருகேசன் ஆகியோர் பொறுப்பேற்றனர். பழனி மேற்கு ஒன்றியத் தலைவராக தங்கவேல், செயலராக ஜோதிமுத்து, பொருளாளராக முத்துச்சாமி, பழனி கிழக்கு ஒன்றியம் தலைவராக பன்னீர், செயலராக துரைச்சாமி, பொருளாளராக திருமலைசாமி, தொப்பம்பட்டி ஒன்றியத் தலைவராக முத்துசாமி, செயலராக கனகராஜ், பொருளாளராக குப்புச்சாமி ஆகியோர் பொறுப்பேற்றனர்.