கொங்கு இளைஞர் பேரவை கொமுக இடையே மோதல்
First Published : 26 Jul 2010 11:26:23 AM IST
நாமக்கல், ஜூலை 25: நாமக்கல்லில் நடைபெற்ற கொங்குநாடு முன்னேற்றக் கழக மாநில மாணவரணி மாநாட்டில், இக் கட்சியினருக்கும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு கோஷ்டியினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை
மோதல் ஏற்பட்டது.
நாமக்கல்லில் கொங்குநாடு முன்னேற்றக் கழக மாநில மாணவரணி மாநாடு நடைபெற்றது. அதன் மாநில தலைவர், நிர்வாகிகள் பேசிக்கொண்டிருந்தபோது, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு அங்கு சென்றார். ஆதரவாளர்கள் அவரைத் தூக்கியவாறு மேடையை நோக்கிச் சென்றனர்.
தனியரசு மேடை நோக்கி வருவதைக் கண்ட கொங்குநாடு முன்னேற்றக் கழக மாணவரணியினர்,அவரை மேடைக்கு வராதவாறு தடுத்து நிறுத்தினர்.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மோதல் ஏற்பட்டது.
போலீஸôர் தலையிட்ட போது, கொங்குநாடு முன்னேற்றக் கழகம் நடத்தும் விழாவுக்கு, தனியரசு எப்படி வரலாம் என்று மாணவரணி நிர்வாகிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
போலீஸôர், தனியரசுவை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து மாநாடு நடைபெற்றது.
இச்சம்பவத்தின் எதிரொலியாக அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக நாமக்கல் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பேருந்துகள் மீது கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இச்சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.