நாம் அரசியல் அதிகாரம் பெற, பொருள் இழப்போம், சிறை ஏற்ப்போம், உயிர் துறப்போம், மானமிகு... மனிதநேயப் போராளி ""தனியரசு"" தலைமையில்... வாரீர் இணைவீர்..... தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழர் பேரவை... தொடர்புக்கு: 9842202445, 9345212385.

Total Pageviews

Friday, March 11, 2011

கொமுக - கொங்கு இளைஞர் பேரவை இடையே மோதல்


கொமுக - கொங்கு இளைஞர் பேரவை இடையே மோதல்

First Published : 18 Dec 2010 12:46:49 PM IST



நாமக்கல், டிச. 17: நாமக்கலில் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தினருக்கும் (கொமுக), கொங்கு இளைஞர் பேரவையினருக்கும் இடையே மோதல் உருவானது. இந்தப் பிரச்னை தொடர்பாக கொங்கு இளைஞர் பேரவையை 
சேர்ந்த 74 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொங்குநாடு முன்னேற்றக் கழகம் சார்பில் விவசாயிகள் அரசியல் உரிமை மாநாடு கரூர் செம்மடையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, மாநாட்டு விளம்பர பேனர்கள் நாமக்கல் மாவட்டம் முழுவதும் முக்கியமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒரு வாரத்துக்கு முன்பு சில விளம்பர பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து எறிந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொமுக சார்பில் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றன.
இந் நிலையில், சேலம் புறவழிச்சாலையில் 4 கார்களில் வந்த ஒரு கும்பல் கொமுக-வின் விளம்பர பேனர்களை கிழிப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, முதலைப்பட்டி அருகே கொமுக-வினர் திரண்டனர். அப்போது அப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை ஒரு கும்பல் கிழித்தது. இதைப் பார்த்தவுடன் அவர்களை கொமுக-வினர் தடுத்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், கார், இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும், அப் பகுதியில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் கல்வீசித் தாக்கப்பட்டன. இதனால் அப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. உடனே அப் பகுதியில் போலீஸôர் குவிக்கப்பட்டனர். பேனரை கிழித்த கும்பல் காரில் தப்பிவிட்டது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து கொமுக-வினர் ஆட்சியர் அலுவலகம் முன் குவிந்தனர். அதே சமயத்தில் கொங்கு இளைஞர் பேரவையினரும் ஆட்சியர் அலுவலகத்துக்கு முன் திரண்டனர். இருதரப்பினரும் ஒரே சமயத்தில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுடன் போலீஸôர் பேச்சு நடத்தி சமாதானம் செய்ய முயன்றனர். இருதரப்பினரும் உடன்படாததால்,  கொங்கு இளைஞர் பேரவை
யை சேர்ந்த 70 பேரை கைது செய்தனர். மேலும், அவர்கள் வந்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.