நாம் அரசியல் அதிகாரம் பெற, பொருள் இழப்போம், சிறை ஏற்ப்போம், உயிர் துறப்போம், மானமிகு... மனிதநேயப் போராளி ""தனியரசு"" தலைமையில்... வாரீர் இணைவீர்..... தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழர் பேரவை... தொடர்புக்கு: 9842202445, 9345212385.

Total Pageviews

Sunday, June 5, 2011

பரமத்தி வேலூர் தொகுதியில் கொங்கு இளைஞர் பேரவை வெற்றி

First Published : 14 May 2011 07:08:38 AM IST

பரமத்தி வேலூர், மே 13: பரமத்தி வேலூர் சட்டப்பேரவைத் தொகுதியில், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையைச் சேர்ந்த உ.தனியரசு 31,018 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட கொங்கு இளைஞர் பேரவைச் சேர்ந்த உ.தனியரசு 82 ஆயிரத்து 548 வாக்குகளும், திமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்ட வடிவேல் கவுண்டர் 51 ஆயிரத்து 314 வாக்குகளும் பெற்றனர்.
இதையடுத்து 31 ஆயிரத்து 18 வாக்குகள் வித்தியாசத்தில் உ.தனியரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பாரதீய ஜனதா வேட்பாளர் கே.மனோகரன் 2 ஆயிரத்து 134 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர்கள் எம்.தங்கதுரை ஆயிரத்து 444 வாக்குகளும், பி.கோபால் ஆயிரத்து 526 வாக்குகளும், ஏ.சிவசங்கர் 2 ஆயிரத்து 11 வாக்குகளும், பி.சீனிவாசன் 402 வாக்குகளும், என்.சுந்தரம் 534 வாக்குகளும், பி.தங்கராஜ் 452 வாக்குகளும், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் 911 வாக்குகளும், ஆர்.முருகேசன் 423 வாக்குகளும், எஸ்.ரவிக்குமார் 712 வாக்குகளும், என்.ராமசாமி 566 வாக்குகளும், வி.வைத்தியநாதன் 6 ஆயிரத்து 225 வாக்குகளும் பெற்றனர்.
741 தபால் வாக்குகளில் தனியரசுக்கு 134 வாக்குகளும், வடிவேல் கவுண்டருக்கு 350 வாக்குகளும், மனோகரனுக்கு 6 வாக்குகளும், தங்கதுரைக்கு 3 வாக்குகளும், கோபால் மற்றும் சீனிவாசனுக்கு தலா ஒரு வாக்கும், வைத்தியநாதனுக்கு 8 வாக்குகளும் கிடைத்தன. 248 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.
உ.தனியரசு மீது வாக்குப் பதிவின்போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் வாக்கு எண்ணும் இடத்துக்கு அவர் வரவில்லை. இதனால், அவரது முகவரும் கபிலர்மலை அதிமுக தேர்தல் தொகுதி செயலாளருமான ராஜேந்திரன், தனியரசு சார்பில் வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.