பதிவு செய்த நாள் : ஜூன் 23,2011,02:24 IST
ப.வேலூர்: ப.வேலூர் சட்டசபை தொகுதியில் நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ., தனியரசுக்கு, கிராம மக்கள், கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ப.வேலூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., தனியரசு, நேற்று ப.வேலூர் அதன் சுற்றுவட்டார கிராமங்களான ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், ஆனங்கூர் கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவருக்கு கிராம மக்கள், கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அ.தி.மு.க., கபிலர்மலை ஒன்றியச் செயலாளர் சாமிநாதன், யூனியன் சேர்மன் ராஜேந்திரன், தங்கராஜ், கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகள் கௌரிசங்கர், தமிழரசன், சங்கர் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
