நாம் அரசியல் அதிகாரம் பெற, பொருள் இழப்போம், சிறை ஏற்ப்போம், உயிர் துறப்போம், மானமிகு... மனிதநேயப் போராளி ""தனியரசு"" தலைமையில்... வாரீர் இணைவீர்..... தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழர் பேரவை... தொடர்புக்கு: 9842202445, 9345212385.

Total Pageviews

Thursday, August 18, 2011

பரமத்தி வேலூர் தொகுதிக்குள் நுழைய போலீஸ் 144 தடை உத்தரவு

Posted in : Reporter                      June:25
தொகுதிக்குள் நுழையவே தடை போட்டார்கள். அடுக்கடுக்காக வழக்கு போட்டு என்னை அலைக்கழித் தார்கள்.என் பாவம் கருணாநிதி குடும்பத்தைச் சும்மா விடாது...’- பரமத்தி வேலூர் எம்.எல்.ஏ. தனியரசு தான் இப்படி ஆவேசமாக கூறிக் கொண்டிருக்கிறார்.

கொங்குநாடு முன்னேற்றக் கழகம் தி.மு.க.கூட்டணியில் இடம் பெற்றதால், கொ.மு.க.வுக்கு போட்டி  அமைப்பான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் உ.தனியரசுவுக்கு ஒரு ‘சீட்’  கொடுத்து தங்கள் கூட்டணிக்கு இழுத்துக்கொண்டது அ.தி.மு.க.

அதையடுத்து,நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியி ட்ட தனியரசு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் வடிவேல் கவுண்டரை 31 ஆயிரத்து  18 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அமோக வெற்றி பெற்றாலும் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல முடியாமல் தவித்தார்  தனியரசு. அவர் மீது ஏழு வழக்குகள் போடப்பட்டு தொகுதிக்குள் நுழைய போலீஸ் 144 தடை உத்தரவும்  பிறப்பிக்கப்பட்டதே இதற்குக் காரணம்.

சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது,தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மற்றும் பா.ம.க.வின ருக்கு இடையே கடும் மோதம் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக மாறியது.

இது தொடர்பாக, இருதரப்பிலும் 400-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்து கொங்கு  இளைஞர் பேரவை நிர்வாகிகளைக் கைது செய்ததோடு,  இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தனியரசுவின் மீது 7  வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

பரமத்தி வேலூர் தொகுதிக்குள் நுழையவும் தனியரசுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது.  கடந்த  இரண்டு மாதங்களாக இருந்து வந்த 144 தடை உத்தரவு கடந்த 15-ம் தேதி விலக்கிக் கொள்ளப்பட்டது.

அதைத்தொடர்ந்து, தன் மீதுள்ள ஏழு வழக்குகளிலும் முன்ஜாமீன் பெற்று கடந்த 20-ம் தேதியன்று தான்   தொகுதிக்குள்ளேயே நுழைந்தார் தனியரசு. தொகுதியில் வலம் வந்த தனியரசுவிடம் பேசினோம்.

‘‘நான் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட்டதால், தி.மு.க.வினர் என் மீது  பொய் வழக்குக¬ ளப் போட்டனர்.  வாக்குப்பதிவின் போது கலாட்டா நடந்த இடத்தில் நான் இல்லை.இது அங்கிருந்த எ ல்லோருக்கும் தெரியும்.

 அப்படியிருக்க, அந்தச் சம்பவத்தில் நான் நேரடியாக ஈடுபட்டதாக என் மீது 7 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டது.

பொய் வழக்குப் போட்டதோடு, என்னை தேடப்படும் குற்றவாளியாகக் காட்டி என் மீது மாஜிஸ்திரேட்  நீதிமன்றத்தில் கைது வாரண்ட்டும் வாங்கி வைத்திருந்தது போலீஸ். இப்போது புதிதாக பொறுப்பேற்ற  கலெக்டரைச் சந்தித்து ஒரு கடிதம் கொடுத்தேன்.

இப்போது தடை உத்தரவு நீக்கப்பட்டு தொகுதிக்குள் நுழைந்திருக்கிறேன்.
கடந்த  தி.மு.க. ஆட்சியில் என் மீது மொத்தம் 35 பொய் வழக்குகள் போடப்பட்டது. கடைசியாக அந்த  ஆட்சி வீட்டுக்குப் போகும் போதும், தங்கள் ஆதரவு போலீஸை வைத்து என் மீது 7வழக்குகளைப்  போட்டார்கள்.

என் மீதும், எங்கள் அமைப்பின் மீதும் இவ்வளவு பொய் வழக்குகள் போட்ட பாவத்திற்கு கருணாநிதி கு டும்பம் இப்போது தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது’’ என்றார் தனியரசு.