பதிவு செய்த நாள் 8/3/2011 8:13:38 தினமலர் முதல்பக்கம்
கொல்லிமலை வல்வில் ஓரி விழா அழைப்பிதழில், மாவட்டத்தில் உள்ள நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளின் உறுப்பினர்கள் பெயரும் இடம் பெற்றிருந்தன. ஆனால் பரமத்திவேலூர் எம்எல்ஏ தனியரசு மட்டுமே விழாவில் பங்கேற்றார்.
சுற்றுலாதலமான கொல்லிமலை சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்டது. இந்த தொகுதி உறுப்பினரான தேமுதிகவை சேர்ந்த சாந்தி இவ்விழாவில் பங்கேற்கவில்லை. தனது சொந்த தொகுதியில் நடைபெறும் விழாவை எம்எல்ஏ சாந்தி புறக்கணித்துள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி எம்எல்ஏவை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ``சென்னையில் கட்சி யின் அவசர கூட்டம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக சென்றுள்ளேன்`` எனக் கூறினார்.