நாம் அரசியல் அதிகாரம் பெற, பொருள் இழப்போம், சிறை ஏற்ப்போம், உயிர் துறப்போம், மானமிகு... மனிதநேயப் போராளி ""தனியரசு"" தலைமையில்... வாரீர் இணைவீர்..... தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழர் பேரவை... தொடர்புக்கு: 9842202445, 9345212385.

Total Pageviews

Friday, August 5, 2011


தனியரசு எம்.எல்.ஏ., சபை முழுவதும் பார்த்து கும்பிட்டார். 

பதிவு செய்த நாள் : மே 24,2011,00:33 DINAMALAR



முதல் கூட்ட நடவடிக்கைகளில் சுவாரஸ்ய துளிகள்:
* தே.மு.தி.க., பெண் எம்.எல்.ஏ., சுபா பதவியேற்றதும் சபை முழுமைக்கும் சுற்றி, சுற்றி வணக்கம் தெரிவித்தார்.
* கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்த தனியரசு எம்.எல்.ஏ.,வும் சபை முழுவதும் பார்த்து கும்பிட்டார். அவர் இருக்கைக்கு செல்லும் போது விஜயகாந்த் அழைத்து கைகொடுத்து வாழ்த்தினார்.
* தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பதவியேற்கும் முன்பும், பின்பும் விஜயகாந்துக்கு வணக்கம் வைத்தனர்.
* தே.மு.தி.க.,வை சேர்ந்த அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் எம்.எல்.ஏ., பதவியேற்கும் போது, தன் பெயரை அகர வரிசையில் மாற்றி அழைத்துள்ளதாக சபை செயலர் ஜமாலுதீனிடம் முறையிட்டார். அழகாபுரம் என்ற பெயர் அடிப்படையில், பட்டியலில் முன்வரிசையில் வைக்குமாறு கூறினார். அவர் முறையிட்டதை பார்த்த விஜயகாந்த், சபையில் அவரை அழைத்து விசாரித்தார். பின், "ஊர் பெயர் தானே சரி செய்து கொள்ளலாம்' என பண்ருட்டி ராமச்சந்திரன் அவருக்கு சமாதானம் செய்தார்.