நாம் அரசியல் அதிகாரம் பெற, பொருள் இழப்போம், சிறை ஏற்ப்போம், உயிர் துறப்போம், மானமிகு... மனிதநேயப் போராளி ""தனியரசு"" தலைமையில்... வாரீர் இணைவீர்..... தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழர் பேரவை... தொடர்புக்கு: 9842202445, 9345212385.

Total Pageviews

Sunday, August 21, 2011

இலங்கைக்கு உதவும் காங்., அரசு : தனியரசு எம்.எல்.ஏ., கொதிப்பு

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2011,22:35 IST தினமலர் அரசியல்செய்தி 


திருப்பூர் : ""ஈழத்தமிழ் இனத்தை அழித்த இலங்கைக்கு காங்., அரசு தொடர்ந்து உதவுவது கண்டிக்கத்தக்கது,'' என, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு பேசினார்.

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின், திருப்பூர் வடக்கு மாநகர செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. பேரவையின் தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., பேசியதாவது: கொங்கு மண்டல மக்களிடையே சரியான கருத்தொற்றுமை ஏற்படுவதை, சில கட்சிகள் விரும்புவதில்லை. மக்கள் அமைப்புகளை உருவாக்கும் முயற்சிக்கு, கடந்த தி.மு.க., அரசு பல்வேறு சோதனைகளை கொடுத்தது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் அமைப்பு நடத்தும் கொங்கு இளைஞர் பேரவைக்கு, தற்போதைய முதல்வரால், சட்டசபையில் தனி அங்கீகாரம் கிடைத்துள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழித்த இலங்கை அரசுடன் கைகோர்த்ததால், கடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு தமிழர்கள் சரியான பாடம் கற்பித்தனர். தமிழக மக்கள் பாடம் கற்பித்த பிறகும் கூட, காங்கிரஸ் அரசு இலங்கைக்கு தொடர்ந்து உதவுவது கண்டிக்கத்தக்கது. இதே நிலை தொடர்ந்தால், லோக்சபா தேர்தலுக்கு பிறகு காங்கிரசும், கூட்டணி கட்சிகளும் தமிழகத்தில் காணாமல் போய்விடும். இவ்வாறு தனியரசு பேசினார்.