கரூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தியாகி இம்மானுவேல் அவர்களுக்கு கரூர் பஸ்நிலையம் அருகில் அவரது உருவப்படத்திற்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் இரா. பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் நீலிமேடு இளங்கோ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார். பரமத்தி வேலுார் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவருமான உ.தனியரசு கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர்துாவி வீர வணக்கம் செலுத்தினர். இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.Thanks